தமிழக இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாரூக் மற்றும் குழுவினருக்கு பாராட்டுதெரிவித்து அய்மான் நிர்வாகக் குழு கூட்டத்தில் தீர்மானம்.
அய்மான் சங்கத்தின் 416 வது நிர்வாகக் குழு கூட்டம் இன்று 03/07/2017 திங்கள் மாலை அபுதாபியில் நடைபெற்றது.
நமது தாய்த்திரு நாட்டில் இஸ்லாமியர்கள் மற்றும் தலித்கள் மீது தொடரும் கொலைவெறித் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தாயகத்தில் செயல்பட்டு வரும் அய்மான் பைத்துல் மால் சேவைகளை விரிவுபடுத்தி பணிகளை மேலும் முடுக்கி விடுவதென முடிவு செய்யப்பட்டது.
பொருளாதார தேவையுடைய பைத்துல் மால் அமைப்புகள் சென்னையில் உள்ள அய்மான் பைத்துல் மால் அலுவலகத்தில் நிர்வாகிகளை அணுகலாம்.
எடிட்டர் அலாவுத்தீன் தயாரிப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் அய்மான் ஆவணப் படத்தின் இரண்டாம் கட்ட படபிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து அடுத்தடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ளப்பட்டு அபுதாபியில் இறுதிக்கட்ட படப்பிடிப்போடு விரைவில் இறுதி செய்யப்பட்டு விடும் என்கிற தகவலை பூந்தை ஹாஜா தெரிவித்தார்.
தமிழக இளம் விஞ்ஞானி ரிஃபாத் ஷாருக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கும், அவர் குழுவினருக்கும் அய்மான் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவருக்கு அமீரகம் வர அய்மான் சங்கம் சார்பில் அபுதாபியில் பாராட்டு விழா நடத்த அழைப்பு விடுக்கப்பட்டு அதை அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.
இக்கூட்டத்தில், எஸ்.ஏ.சி.ஹமீது, லால்பேட்டை அப்துல் ரஹ்மான் ரப்பானி, காயல் உமர் அன்சாரி, கொள்ளுமேடு ஹாரிஸ் மன்பஈ, லால்பேட்டை அப்பாஸ் மிஸ்பாஹி , பசுபதிகோவில் சாதிக் பாட்சா, பூந்தை ஹாஜா, செயற்குழு உறுப்பினர்கள் மன்னார்குடி பிர்தவ்ஸ் பாஷா மற்றும் லால்பேட்டை இஸ்மாயில், காயல் ஷேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.