அய்மானின் அன்பு நெஞ்சங்களே!
கடந்த இரு தினங்களாக, அமீரக அரசு அறிவித்திருக்கும் பொது மன்னிப்பு சம்பந்தமாக சிறிது தயக்கத்துடன் அய்மான் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு உதவி கோரும் தமிழ் நெஞ்சங்களோடு தொடர்பில் இருந்தபடி அவர்களை ஆதரித்தும், அரவணைத்தும் வழிகாட்டியும் வருகிறோம்.
அவர்கள் ஒவ்வொருவரின் கதையும் நம் நெஞ்சங்களை பிழிந்தெடுக்கின்றது. அவர்களுக்கு பின்னால் மறைந்திருப்பது வேண்டுமென்ற சட்ட மீறலல்ல, தியாகம் மற்றும் குடும்ப சூழல்.
அவ்வாறானேர் அதிகமதிகம் கேட்கும் (FAQ) கேள்விகள் என்று அமீரக அரசு வெளியிட்டிருக்கும் கையேட்டினை நம் தமிழ் நெஞ்சங்களுக்கு நமது மொழியில் கொண்டு சேர்க்க வேண்டுமென்ற நன்னோக்கில், தமிழில் மொழி பெயர்த்து தந்துள்ளார் அய்மான் பைத்துல்மாலின் தலைவர் சகோ.அதிரை ஏ ஷாஹுல் ஹமீது ஹாஜியார் அவர்கள்
இந்த கையேட்டினை அய்மான் சங்கம் நிர்வாகிகள், கேம்ப்புகள், டைப்பிங் சென்டர், மற்றும் தமிழ் உணவகங்களில் விநியோகிக்க துவங்கியுள்ளனர்.
தேவைப்படுவோர் உங்கள் ஈமெயில் முகவரியை கமெண்டில் தரவும்.