அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் ஹிஜ்ரி இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி அஹலியா மருத்துவமனை கூட்ட அரங்கில் 30/08/2019 வெள்ளிக் கிழமை மாலை 8:00 மணிக்கு நடைபெற்றது.
அபுதாபி அய்மான் சங்கத் தலைவரும், திருச்சி அய்மான் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் தலைவருமான கனிமொழிக் கவிஞர் களமருதூர் ஹாஜி ஜெ.ஷம்சுத்தீன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியை மெளலவி ஷர்புத்தீன் மன்பஈ இறை வசனம் ஓதி துவக்கி வைத்தார்.
அய்மான் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி வரவேற்புரை நிகழ்த்தினார்.
அய்மான் பைத்துல் மால் தலைவர் அதிரை.ஏ.ஷாஹுல் ஹமீது அறிமுக உரை நிகழ்த்தினார்.
மெளலவி சையத் பாஷா ரஷாதி ஹிஜ்ரி ஆண்டின் வரலாறை சுட்டிக் காட்டி உரையாற்றினார்.
சென்னை ஜமாலியா அரபிக் கல்லூரியின் தலைமை ஆசிரியரும்,ரியாளுஸ் ஸாலிஹீன் நூல் ஆசிரியருமான பன்நூல் ஆசிரியர் மெளலவி அப்ஸலுல் உலமா எம்.அப்துல் ரஹ்மான் பாஜில் பாகவி ஹிஜ்ரியின் பின்னணி குறித்த வரலாறை தெளிவுபடுத்தி, அய்மான் சங்கத்தின் சேவை, அய்மான் பைத்துல் மால் பணிகளை வெகுவாக பாராட்டி நிறைவுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியை துணைப் பொதுச் செயலாளர் பூந்தை ஹாஜா மைதீன் தொகுத்து வழங்கினார்.
செயலாளர் பசுபதிகோவில் சாதிக் பாஷா நன்றி கூறினார்.
அஹலியா மருத்துவமனை சார்பில் அபுதாபி தமிழ் சொந்தங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு சலுகைக்கான அட்டையை அய்மான் சங்கத் தலைவர் ஹாஜி ஜெ.ஷம்சுத்தீன், அய்மான் பைத்துல் மால் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீது ஆகியோரிடம் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் பிலால்
வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணைப் பொருளாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர், ஜமாஅத் ஒருங்கிணைப்பு செயலாளர் பார்த்திபனூர் நிஜாம் மைதீன் ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்.
இறுதியாக அபுதாபி ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளர் கொள்ளுமேடு மௌலவி சிராஜுத்தீன் மன்பஈ துஆவுடன் கூட்டம் நிறைவடைந்தது.