இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் Ex.MP, தமிழ்நாடு மாநில முதன்மை துணைத் தலைவர் எம்.அப்துல் ரஹ்மான் Ex.MP, மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் Ex.MLA, விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் மற்றும் குழுவினருக்கு இலங்கைத் தொழில் அதிபரும்,திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பொருளாளரும், அய்மான் சங்கத்தின் முன்னாள் நிர்வாகியுமான கீழக்கரை ஹாஜி அஹமது குத்புதீன் ராஜா அவரது இல்லத்தில் இன்று (11-09-2019) விருந்தளித்து கவுரவித்தார்.