அய்மான் சங்கத்தின் செயற்கரிய நலப் பணிகளில் மற்றுமோர் மணிமகுடமாய் குருதிக் கொடையளிப்பு நிகழ்வு 27/09/2019 வெள்ளியன்று ஒரே நாளில் இரு வேறு இடங்களில் அரங்கேற இருப்பது மிகுந்த மகிழ்வைத் தருகிறது அல்ஹம்துலில்லாஹ்.
வழமையாக வெள்ளிக் கிழமைகளில் இரத்த வங்கி விடுமுறையாகும். குருதிக் கொடையாளர்கள் அதிக அளவில் இருந்தால் உங்களுக்காக நண்பகல் 2:00 மணி முதல் இரவு 9:30 வரை திறந்து சிறப்பு சேவை புரிகிறோம் என்று சிறப்பு சலுகை வழங்கியதின் பேரில் அபுதாபியில் நிகழ உள்ளது.
முஸஃப்பாவில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட முகாமில் நாம் இணைந்திருக்கிறோம்.
நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுவரை தங்கள் பெயரை பதிவு செய்து குருதி கொடையளிக்க முன் வந்துள்ளனர் என்பதே நாம் எடுத்திருக்கும் முயற்சி வெற்றிக்குறிய அடையாளமாக தென்படுகிறது அல்ஹம்துலில்லாஹ்.
ரத்த தான முகாமில் அதிகமானோரை பங்கேற்க வைக்கும் வகையில் இரவு பகலாக பணியாற்றி வரும் பூந்தை ஹாஜா மைதீன் அவர்களோடு லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர்,பார்த்திபனூர் நிஜாம் மைதீன்,
பசுபதி கோவில் சாதிக் பாஷா,மன்னார்குடி ஃபிர்தோஸ் பாஷா, செயற்குழு உறுப்பினர் எமனை.ஷர்ஃபுத்தீன் உள்ளிட்ட நமது நிர்வாகிகள் அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை நல்கி களப்பணியாற்றி வருகின்றனர்.
தலைவர் களமருதூர் ஷம்சுத்தீன் ஹாஜியார்,துணைத் தலைவர் கீழக்கரை முஹம்மது ஜமாலுத்தீன்,மார்க்கத் துறை செயலாளர் காயல்பட்டிணம் மெளலவி ஹுஸைன் மக்கி ஆலிம் ஆகியோரது சீரிய வழிகாட்டல் அய்மான் சங்கத்திற்கு வலிமை சேர்த்து கொண்டிருக்கிறது.
அய்மான் பைத்துல் மால் தலைவரும்,அய்மான் சங்க முன்னாள் தலைவருமான மரியாதைக்குரிய அதிரை.ஏ.ஷாஹுல் ஹமீது அவர்கள் குருதி வழங்கி முகாமை துவக்கி வைக்கிறார்.
வெள்ளிக் கிழமையன்று இரு முகாம்களுக்கும் வருகை தரும் குருதிக் கொடையாளர்களை கனிந்த இதயத்தோடு வரவேற்போம் இன்ஷா அல்லாஹ்.
– பொதுச் செயலாளர்