அபுதாபி அய்மான் சங்கம் சார்பில் 27/09/2019 வெள்ளிக் கிழமை மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை காலிதியா இரத்த வங்கியிலும்,
மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை முஸப்ஃபா சபீர் மால் அருகில் மொபைல் இரத்த வங்கியிலும் இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்றது.
நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இம்முகாம் குறித்து இரத்த வங்கியின் மருத்துவர்களும், செவிலியர்களும் நமது அய்மான் சங்க சேவைகளை வெகுவாகப் பாராட்டி, நமது சங்கத்தின் சேவைகளை கேட்டறிந்து, ஆச்சரியமடைந்து இதயப் பூர்வமாக பாராட்டியுள்ளனர்.
அய்மான் சங்கத்தின் இரத்ததான சேவையை அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளார்கள்.
அய்மான் இரத்தான முகாம் அபுதாபி மற்றும் முஸப்பாவில் கலந்துக்கொண்டு குருதிக் கொடையளித்த அனைவருக்கும் இந்த சான்றிதழை நன்றியுடன் சமர்பிக்கின்றோம்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே..!
– அய்மான் சங்கம் அபுதாபி