திருச்சி அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவரும், அதன் ஸ்தாபகர்களில் ஒருவரும், அபுதாபி அய்மான் சங்கத்தின் தலைவரும், அமீரக காயிதே மில்லத் பேரவையின் மூத்த துணைத் தலைவருமான களமருத்துர் அல்ஹாஜ் ஜெ.ஷம்சுத்தீன் அவர்கள் சற்று முன் (29 செப்டம்பர் 2020 செவ்வாய் 12 மணியளவில்) இறை அழைப்பை ஏற்றார் எனும் நெஞ்சை பிழிந்தெடுக்கும் தகவல் வந்துள்ளது. இன்னாலில்லாஹி வன்னா இலைஹி ராஜவூன்.
தலைசிறந்த கல்வியாளராக, சிறந்த சமூக சேவராக, சிறந்த தலைவராக மிளிர்ந்தவர். தலைவர் ஷம்சுத்தீன் ஹாஜியார் அவர்களின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பேரிழப்பு.
அய்மான் சங்கத்தின் இளம் நிர்வாகிகள் எல்லோருடனும் உரையாடும் போது, எங்களோடு தானும் உற்சாகமாக இரண்டற கலந்து விடுவார்கள்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பன்னூற்றுக் கணக்கான மஸ்ஜிதுகளை கட்டி எழுப்ப முக்கிய காரணமானவர்கள்.பல்வேறு நலக்காரியங்களுக்கும், அறப் பணிகளுக்கும் அள்ளி வழங்கியவர்கள்.இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் முழுகி,மூழ்கி அதன் தலைவர்கள் மீது அளப்பறிய நேசம் கொண்டு, அவர்களது ஆலோசனைகளை தொடர்ந்துப் பெற்று பணி செய்தவர்.வசதியற்ற பிள்ளைகள் கல்லூரிகளில் படிக்க பெருமளவில் உதவியவர்.
எமது குடும்பத்தின் மூத்த உறவை இழந்து தவிக்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும்,அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தித்து,அய்மான் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த கவலையை பதிவு செய்து, அன்னாருக்காக அனைவரும் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.
– ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி
பொதுச் செயலாளர்,
அய்மான் சங்கம்அபுதாபி.