காயல் மாநகரில் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

95

சகோ.சுபுஹான் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள‌ காயல் மாநகர் வருகை தந்த அய்மான் சங்கத் தலைவர் கனிமொழிக் கவிஞர் ஜே ஷம்சுதீன் ஹாஜியார் அவர்களுக்கு காயல்பட்டினத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சி ஹமீது, துணைத் தலைவர் வீ.எஸ்.டீ ஷேக்னா லெப்பை, செயலாளர் உமர் அன்சாரி ஆகியோரது முஹல்லாவான, 1100 வருடப் பழமை வாய்ந்த மொகுதும் பள்ளிவாசல் ஜமாஅத்தின் சார்பில் அய்மான் தலைவ‌ருக்கு உற்சாகமான வரவேற்பளிக்கப்பட்டது.

காயல் மாநகர மக்களின் ஒற்றுமை, மற்றும் சமூக அக்கறையின் சின்ன‌மாக களங்கரை விளக்கமாகத் திகழும் கே.எம்.டீ மருத்துவமனை நிர்வாகம் அய்மான் தலைவருக்கு வரவேற்பளித்தது.


நாங்கள் கல்லூரித் தோழர்கள், நாங்கள் ஜமாலியன்கள் என்று கூறி நேசத்தை பகிர்ந்து கொள்ளும் அய்மான் செயலாளர் எம்.ஓ. அன்சாரிஅவர்களின் தந்தை காயல் துணி உமர் ஹாஜியார் மற்றும் அய்மான் தலைவர் சம்சுதீன் ஹாஜியார் அய்மான் சங்கத்தின் மார்கத்துறை செயலாளரும், அபுதாபி ஜமாஅத்துல் உலமா சங்கத் தலைவருமான மொள்லவி ஹாபிஸ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கி மஹ்ளரி அவர்களின் இல்லத்தில் அவர்களது குழந்தைகளோடு அய்மான் தலைவர்.