பாதிப்பின் உக்கிரம் சொல்லி மாளாது. அந்த அளவுக்கு சேதமும் இழப்பும் நம் மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
இரவு வருகிறதே என்ற பயங்கரத்தில் வாழும் மக்களை இரவில் சென்று சந்திக்கிறோம்.
நம்மால் முடிந்த வரை குக்கிராமங்களுக்கு சென்று ஒரு நாளைக்கு நான்கு முறை வரைக்கும் உணவு விநியோகம் செய்கிறோம்.
ஆனாலும் போதாது.
நிவாரணப் பணிகளில் 95% பொது மக்களே ஈடுபடுகின்றனர்.
முக்கியமாக, இஸ்லாமிய இயக்கங்களின் பணியும் பங்களிப்பும் அளப்பரியது.
இன்ஷா அல்லாஹ் இன்றும் நமது களப்பணியைத் தொடர்வோம்.