ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் அவர்களுக்கு அய்மான் வரவேற்பு

0
397

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை புரிந்துள்ள திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் முனைவர் பேராசிரியர் P. N. P. முஹம்மது சகாபுதீன் அவர்களை அய்மான் சங்கத்தின் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 01-12-2022 வியாழக்கிழமை மாலை 3.30 மணி அளவில் அய்மான் சங்கத்தின் துணைத் தலைவர் ஆவை A. S. முஹம்மது அன்சாரி அவர்கள் இல்லத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முஹம்மது ஜமாலுதீன் அவர்கள் தலைமையேற்றார்கள்.

இந் நிகழ்ச்சியை ஆடுதுறை இமாம் E. ஷாஹுல் ஹமீது தாவூதி இறை வசனம் ஓதி துவங்கி வைத்தார்கள்

அதனைத் தொடர்ந்து கடந்த 42 வருடங்களாக அய்மான் சங்கம் செய்து வரும் நற்பணிகளை சங்கத்தின் பொருளாளர் A முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி மற்றும் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முகம்மது அப்துல் காதர் அவர்களும் பேராசிரியர் அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் P. N. P. முஹம்மது சகாபுதீன் அவர்களுடன் கலந்துரையாடலுக்கு பிறகு அவர்களுக்கு அய்மான் சங்கத்தின் சார்பாக பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்
A. அப்துல் ஹமீது , Etisalat நவசாத் அலி , நாகூர் அமீர் அலி மற்றும் அய்மான் சங்கத்தின் துணைத் தலைவர் மதுக்கூர் ஒய் எம் அப்துல்லா, பைத்துல் மால் பொதுச் செயலாளர் பார்த்திபனூர் நிஜாம் மைதீன், துணைப் பொருளாளர் பசுபதி கோவில் சாதிக் பாட்சா மேலும் சங்கத்தின் உறுப்பினர்கள் M. முஹம்மது யாசிர், M. முஹம்மது அஸ்பர், லெப்பை தம்பி ஆகியோர் கலந்து கொண்டார்கள்

இறுதியாக அய்மான் சங்கத்தின் துணைத் தலைவர் ஆவை A. S.முஹம்மது அன்சாரி அவர்கள் நன்றியுரை வழங்க லால்பேட்டை மெளலவி ரஷீத் அஹ்மது ஜமாலி
துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here