வள்ளல் அப்துல் பாரி சாகிப் மற்றும் அய்மான் சங்க நிறுவனர் காயல்பட்டினம் ஹாஜி ஷேக் அப்துல் காதர் நினைவேந்தல் நிகழ்ச்சி

280

மறைந்த சமுதாயப் புரவலர் வள்ளல் கும்பகோணம் ஹாஜி அப்துல் பாரி சாகிப் மற்றும் அய்மான் சங்க நிறுவனர்களில் ஒருவரான காயல்பட்டினம் ஹாஜி ஷேக் அப்துல் காதர் மறைவைத் தொடர்ந்து, அவ்விரு பெருமக்களின் மஃபிரத் வேண்டி, அபுதாபி அய்மான் நடத்திய காயிப் ஜனாஸா தொழுகை மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி, அபுதாபில் 30 – 01- 2023 திங்கள் கிழமை இரவு 8.00 மணிக்கு அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முஹம்மது ஜமாலுதீன் அவர்கள் துவங்கி வைத்தார்கள்.

நிகழ்ச்சியில் நமது அய்மான் சங்கத்தின் மீது பேரன்பு கொண்டவரும், சமுதாயப் புரவலரும், வள்ளல் பெருந்தகையுமாகிய ஒயிட் ஹவுஸ் அப்துல் பாரி ஹாஜியார் மற்றும் அய்மான் சங்க நிறுவனர்களில் ஒருவரும் மேனாள் பொதுச் செயலாளருமான காயல்பட்டினம் ஹாஜி மெல்கோ ஷேக் அப்துல் காதர் ஆகிய இருவர் ஹக்கிலும் சூரா யாசின் ஓதப்பட்டு அவர்கள் வாழ்ந்த காலங்களில் அவர்களுடைய நற்செயல்களை நினைவுகூறப்பட்டு அன்னவர்களின் மறுமை வாழ்விற்காகவும் துஆ செய்யப்பட்டது. மேலும் அய்மான் சங்கத்தின் மார்க்கத்துறை செயலாளர் மௌலவி ஹாஃபிஸ் SMB ஹுசைன் மக்கி மஹ்ழரி அவர்கள் மறைந்த இருவருக்கும் காயிப் ஜனாஸா தொழுகை இமாமத் செய்தார்கள்.

நிகழ்ச்சியில் காங்கிஸ் பேரியக்கத் தலைவர் எஸ்.எம் ஹிதாயதுல்லாஹ் மற்றும் தொழிலதிபர் அல் ரீம் நிறுவன இயக்குநர் சையது அபு தாஹிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.