அபுதாபி அய்மான் சங்கம் நடத்திய மிஃராஜ் இரவு நிகழ்ச்சி

0
332

அய்மான் சங்கத்தின் சார்பில் மிஃராஜ் இரவு நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் ரஜப் பிறை 27 ல் மிக சிறப்பாக நடைபெறும் அதே போன்று இந்த வருடமும் 17-02-2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 7:30 மணியளவில் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் -MAK தொகுத்து வழங்க, அய்மான் சங்கத்தின் பொருளாளர் மெளலவி A. முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி திருக்குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர், கீழக்கரை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுத்தீன் தலைமை வகித்தார்கள்.

சங்கத்தின் துணைத் தலைவர் காதர் மீரான் பைஜீ அவர்கள் வரவேற்பு வழங்கினார்கள்

பைத்துல்மால் தலைவர் அதிரை அல்ஹாஜ் A. ஷாஹுல் ஹமீது அவர்கள் அய்மான் முன்னுரை வழங்கினார்கள்.

சிறப்பு பேச்சாளர்

மௌலானா மௌலவி அப்ழலுல் உலமா M.கலீலுர் ரஹ்மான் ஆலிம் பிலாலி சிறப்புரை வழங்கினார்

அய்மான் சங்கத்தின் பைத்துல்மால் தலைவர் அதிரை அல்ஹாஜ் A. ஷாஹுல் ஹமீது மற்றும் துணைத் தலைவர் காதர் மீரான் பைஜீ அவர்களும் மௌலானா மௌலவி M.கலீலுர் ரஹ்மான் ஆலிம் பிலாலி அவர்களுக்கு பொன்னாடை அனுவித்து கௌரவித்தார்கள்.

சங்கத்தின் துணைத் தலைவர் ஆவை A. S. முஹம்மது அன்சாரி நன்றியுரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சி துஆவுடன் நிறைவு பெற்றது

இந்த நிகழ்ச்சியில், அபுதாபி ஜமாத்துல் உலமா சபை, அபுதாபி லால்பேட்டை ஜமாத் ,அமீரக காயிதே மில்லத் பேரவை, எரவாஞ்சேரி ஜமாத் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அய்மான் சங்கத்தின் பொருளாளர் A. முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி அவர்கள், மக்கள் தொடர்பு செயலாளர் காயல் உமர் அன்சாரி அவர்கள் சங்கத்தின் துணை பொருளாளர் பசுபதிகோவில் சாதிக் பாட்சா, செயற்குழு உறுப்பினர் அம்பகரத்தூர் M. முஹம்மது கைசர்,செயற்குழு உறுப்பினர் குத்தாலம் நவ்சாத் அலி, விழா குழு உறுப்பினர் லப்பை தம்பி உள்ளிட்டோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here