இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய மகளிர் அணி தலைவிக்கு அய்மான் சங்கம் மற்றும் அபுதாபி KMCC வரவேற்பு

199

ஐக்கிய அரபு அமீரகம் அரசின் அழைப்பை ஏற்று அபுதாபிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ன் தேசிய மகளிர் அணி தலைவி, தமிழ்நாடு வக்ஃப் போர்டு உறுப்பினர் மற்றும் சென்னை எழும்பூர் கவுன்சிலர் டாக்டர் பாத்திமா முஸஃபர் அவர்களுக்கு அய்மான் சங்கத்தின் சார்பாக அபுதாபியில் இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நாள் 22/02/2023 மாலை 8 மணி அளவில் வரவேற்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் துவக்கமாக அபுதாபி KMCC பொதுச்செயலாளர் வக்கீல் முஹம்மது குன்னி மற்றும் KMCC தலைவர் சுக்கூர் அலி கல்லுங்கள் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.

அய்மான் சங்கத்தின் பைத்துல் மால் தலைவர் அதிரை A ஷாகுல் ஹமீது ஹாஜியார் அவர்கள் அய்மான் சங்கம் கடந்த 42 வருடங்களாக செய்து வரும் நற்பணிகளை எடுத்துரைத்தார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அய்மான் சங்கம் மூலம் துருக்கி மற்றும் சிரியா தூதரகத்தில் வழங்கி வருவதை சுட்டிக்காட்டினார்கள்.

நிகழ்ச்சியில் தலைவர் கீழக்கரை H. M. முஹம்மது ஜமாலுதீன் மற்றும் பைத்துல் மால் தலைவர் அதிரை A. ஷாஹுல் ஹமீது ஹாஜியார் அவர்களும் தேசிய மகளிர் அணி தலைவி பாத்திமா முஸஃபர் அவர்களுக்கு பொன்னாடை வழங்கி கௌரவித்தார்கள்.

மேலும் நிகழ்ச்சியில் காயிதே மில்லத் பேரவையின் அபுதாபி மண்டல அமைப்பு செயலாளர் ஆவை A. S. முஹம்மது அன்சாரி மற்றும் துணைத் தலைவர் காதர் மீரான் பைஜி அவர்களும் முஸஃபர் அஹம்மது அவர்களுக்கு பொன்னாடைபோற்றி கௌரவித்தார்கள்.

நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் மகளிர் அணி தலைவி டாக்டர் பாத்திமா முஸஃபர் அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள்.

இறுதியாக இந்தியன் இஸ்லாமியக் சென்டர் துணை தலைவர் மாற்று அபுதாபி KMCC துணை தலைவர் அசரப் பொன்னணி அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்

நிகழ்ச்சியில் அய்மான் சங்க துணை தலைவர் மதுகூர் Y. M. அப்துல்லாஹ், பொருளாளரர் லால்பேட்டை A. முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி,மக்கள் தொடர்பு செயலாளர் காயல் உமர் அன்சாரி,நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர்-MAK, செயற்குழு உறுப்பினர் முஹம்மது கைசர், முஹம்மது யாசிர் அவர்களும் மேலும் அபுதாபி KMCC நிர்வாகிகள் C. சமீர்,வீரன் குட்டி,மஜித், அப்துல் அஜீஸ்,பஷீர் மற்றும் அபுதாபி காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகளும் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அய்மான் சங்கம் மற்றும் அபுதாபி KMCC நிர்வாகிகள் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.