டாக்டர் நவாஸ் கனி, M.P அவர்களுக்கு அய்மான் சங்கம் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவை வரவேற்பு

354

ஐக்கிய அரபு அமீரகம் வருகை புரிந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் மாநிலத் துணைத் தலைவர் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் எம். பி. டாக்டர் நவாஸ் கனி அவர்களுக்கு அய்மான் சங்கத்தின் சார்பாக அபுதாபியில் காயிதே மில்லத் பேரவையின் அபுதாபி மண்டல அமைப்பு செயலாளர் ஆவை A. S. முஹம்மது அன்சாரி அவர்கள் இல்லத்தில் நாள் 24/02/2023 மாலை 5 மணி அளவில் வரவேற்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அய்மான் சங்கத்தின் பைத்துல் மால் தலைவர் அதிரை A ஷாகுல் ஹமீது ஹாஜியார் அவர்கள் அய்மான் சங்கம் கடந்த 42 வருடங்களாக செய்து வரும் நற்பணிகளை எடுத்துரைத்தார்கள்.

நிகழ்ச்சியில் தலைவர் கீழக்கரை H. M. முஹம்மது ஜமாலுதீன் மற்றும் காயிதே மில்லத் பேரவையின் அபுதாபி மண்டல அமைப்பு செயலாளர் ஆவை A. S. முஹம்மது அன்சாரி அவர்களும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் எம். பி. டாக்டர் நவாஸ் கனி அவர்களுக்கு பொன்னாடைபோற்றி கௌரவித்தார்கள்.

மேலும் நிகழ்ச்சியில் காயிதே மில்லத் பேரவையின் துணைத் தலைவர் முஹம்மது தாஹா, துணைப் பொதுச் செயலாளர் பரக்கத் அலி, பேரவையின் அபுதாபி மண்டல செயலாளர் லால்பேட்டை A. முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, அய்மான் பைத்துல்மால் பொதுச்செயலாளர் பார்த்திபனூர்நிஜாம் மைதீன் அய்மான் செயற்குழு உறுப்பினர் அடியற்கை M.அஸன் அலியார்,, அமீரக திமுக ஜாஹிர் ஹுசைன் மற்றும் லால்பேட்டை யாசிர் அரஃபாத் மேலும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் எதிர்வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மார்ச் 10 ஆம் தேதி 75 ஆவது பவள விழா மாநாடு பற்றி கலந்துரையாடப்பட்டது

நிகழ்ச்சி ஏற்பாடுகளை அய்மான் சங்கம் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.