“சார் இனி கிளாஸ் கிடையாதா?” – அய்மான் டிஜிட்டல் ஜர்னலிசம் பயிற்சியின் வெற்றி

0
990

அந்த இளைஞர், தனது கடுமையான வேலைப் பளுவுக்கிடையே, கடந்த ஒரு வருட காலமாக, ஒவ்வொரு நாளும், நேரந் தவறாமல் சரியாக மாலை ஏழு மணிக்கு ஆன்லைன் வகுப்புகளைத் துவக்குவார்.

தொடர்ந்து ஒரு மணி நேரம், எந்த சடைவுகளுமின்றி, மிக அழகிய முறையில் வகுப்பெடுத்து, மாணவ மாணவிகளை தன் பால் கவர்ந்திழுத்து… இதோ இன்று அந்த மாணாக்கர்கள் உணர்ச்சி மேலிட்டால் வினவுகின்றனர் “சார் இனி கிளாஸ் கிடையாதா?”

“கடந்த ஒருவருட காலமாக எல்லா வேலைகளையும் ஒதுக்கித் தள்ளி விட்டு உங்கள் வகுப்பில் கட்டுண்டு உட்காருவோமே அது இனி இல்லையா சார்?”

தங்கள் ஆசிரியரைப் பிரிய மனமின்றி அந்த ஐம்பது மாணவ மாணவியரும் தம் மனக்குமுறலை வெளிப்படுத்திய உணர்வுப் பூர்வமான காட்சிகளை, நேற்று மாலை,அய்மான் நிர்வாகிகள்

நேரலையில் பார்த்து வியந்து போனோம்.

நாம் மேற் கூறிய அத்தனை பாராட்டுக்கள், நன்றியறிதலுக்குரியவர்கள் அருமைச் சகோதரர் பேராசிரியர் முனைவர் அஸ்கர் அவர்களும், அமீரகத் தாய்ச் சபை அபுதாபி அய்மான் சங்க சகோதரர்களும் என்று கூறினால் மிகையன்று.

காலை வேளைகளில் கல்லூரிப் பேராசிரியராகவும், மாலையில் புகழ் பூத்த இசை முரசு FM இணைய வானொலியின் இயக்குநராகவும், தொடர்ந்து Aiman Digital Media வகுப்புகளை நடத்தும் பேராசிரியராகவும் பல துறைகளில் வெற்றிக் கொடி நாட்டிய பேராசிரியர் முனைவர் அஸ்கர் அவர்கள், பிறவியிலேயே கண் பார்வை குறைபாடு உள்ளவர் என்பது நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை, காரணம், அவரும் யாரிடமும் அதனைக் குறிப்பிட்டுச் சொல்வதில்லை.

எந்த சப்ஜெக்ட்டை எடுத்தாலும் நமக்கு சரிக்குச் சமானமாக fully updated ஆகப் பேசும் பேராசிரியர் அஸ்கர் அவர்கள் ஒரு மாற்றுத் திறனாளி என்று எவரும் எளிதில் கண்டு பிடிக்கவும் முடியாது. அவ்வளவு Subject knowledge அவரிடம் கொட்டிக் கிடக்கும்.

அந்த அறிவு ஞானம் தான் மாணவ மாணவியரையும், நம்மையும் அவர்பால் சுண்டி இழுக்கும்.

சகோதர சகோதரிகளே இன்று நாம் எத்தகைய கால கட்டத்தில் வாழுகிறோம்.

“The Entire Indian Media has been bought over, Castrated and intimidated… ” என்று சுப்பிரமணிய சாமியே கண்ணீர் விட்டுக் கதறும் மிக மோசமான கால கட்டத்தில் வாழ்ந்து வருகிறோம்.

அதனை மனதில் வைத்து தான், ஒரு வருடத்திற்கு முன்னர் நாமும் சகோதரர் பேராசிரியர் அஸ்கர் அவர்களும், நமது சமுதாய இளைஞர்களை டிஜிட்டல் மீடியா ஜாம்பவன்களாக பயிற்றுவித்து சமுதாயத்திற்கு அற்பணிப்பது என்று முடிவு செய்ததன் பலாபலன், முதல் பேட்சை இன்று சற்றொப்ப ஐம்பது மாணவ மாணவியர் நிறைவு செய்துள்ளனர்.

நிறைவு செய்த அனைத்து மாணவ மாணவியருக்கும் நமது நெஞ்சம் நிறைந்த

வாழ்த்துகள்.

நாம் மேற்கூறிய நற்காரியங்களில் நால்வரை மறக்க முடியாது.

1. அய்மான் சங்கத் தலைவர் ஹாஜி கீழை ஜமாலுத்தீன்.

2. திரு. பிரபாகரன்.

3. அய்மான் நிர்வாகச் செயலாளர் சகோதரர் ஆடுதுறை MAK.

4. அய்மான் பைத்துல் மால் தலைவர் அருமைச் சகோதரர் அதிரை ஷாஹுல் ஹமீது ஹாஜியார்.

Last but most important பேராசிரியர் அஸ்கர் அவர்களுக்கு வலமும் புறமுமாகச் செயல்பட்ட அவர்தம் இல்லத்தரசி சகோதரி நஸீபா அஸ்கர் அவர்கள்.

இதோ இரண்டாவது Batch இறைவனருளால் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறோம் நண்பர்களே.

அய்மான் சகோதரர்கள் ஹக்கிலும், சகோதரர் பேராசிரியர் அஸ்கர் அவர்களது ஹக்கிலும் மறவாமல் துஆ செய்யுங்க தோழமைகளே.

– உலகம் முழுவதும் பரவிய அருள்மறை திருக்குர்ஆன் இன்பத் தமிழ் மொழியாக்கம்

– திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி

– அய்மான் பைத்துல் மால்

– அய்மான் டிஜிட்டல் மீடியா வகுப்புகள்

– அய்மான் தொழிற் கல்வி பயிற்சிக் கூடம்…….

ஆரவாரமின்றி…

அமைதியாக…

தொடர்கிறது அய்மான் சங்கப் பணிகள்.

இறைவா நீயே மகாப் பெரியவன்.

Hameed Sac

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here