திருச்சி அய்மான் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மீலாதுவிழா

71

3-10-2023 செவ்வாய் கிழமை திருச்சி அய்மான் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற மீலாதுவிழா சிறப்பு நிகழ்ச்சி

விழாவில் கல்லூரி தலைவர் கீழக்கரை டவுன் காஜி அஷ்ஷைக் மௌலானா Dr. காதர் பக்ஷ் ஹஜ்ரத் அவர்கள் தலைமை உரையாற்றிய போது “அஷ்ஷைக் மௌலானா முஹம்மத் முதவல்லி அஷ்ஷஃராவி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் சிறப்புகளை எடுத்துக் கூறி அவர்களின் தப்ஸீர், அதை மொழி பெயர்த்த லால்பேட்டை ஹஸ்ரத் M Y. முஹம்மது அன்சாரி அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்கள்.

அடுத்து பேசிய கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் மரியாதைக்குரிய M.Y. ஹபீபுல்லாஹ் அவர்கள் இமாம் அஷ்ஷஃராவி அவர்களைக் குறித்த காணொலிகளை வெளியிட்டு அவர்கள் ஆற்றியுள்ள குர்ஆனின் சேவைகளை விவரித்து பேசினார். மேலும் மொழி பெயர்ப்பு செய்த லால்பேட்டை ஹஸ்ரத் M Y. முஹம்மது அன்சாரி அவர்களுக்கு கல்லூரி சார்பில் பொன்னாடை அணிவித்து விருது வழங்கி அத்துடன் ரூபாய் இருபத்தி ஐயாயிரம் வழங்கி கண்ணியப் படுத்தினார்.

மேலும் தப்ஸீர்களிலேயே இந்த தப்ஸீர் அஷ்ஷஃராவி எவ்வாறு தனித்துவம் பெற்றது என்பதை விவரித்து தமிழில் வெளியிடப்படும் இந்த நூல்கள் உலகளவில் கல்லூரிகளில், ஆய்வுகளில், மாநாட்டு அமர்களில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் இதற்கு ISBN NUMBER வாங்கி அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் இதை அய்மான் கல்லூரி நிர்வாகம் தனது பொறுப்பில் செய்து கொடுக்கும் என்று கூறியதுடன் அதற்காக ஒரு பொறுப்பாளரையும் அப்போதே அறிவிப்புச் செய்து உத்தரவிட்டார்.

கல்லூரியின் துணைத் தலைவர் மற்றும் எலந்தங்குடி அப்துல் மஜீத் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

ஆயிரத்திற்கும் அதிகமான அளவில் கூடியிருந்த மாணவிகளுக்கு மத்தியில் ஒரு மணி நேரம் மீலாதுவிழா நிகழ்ச்சியில் லால்பேட்டை ஹஸ்ரத் M Y. முஹம்மது அன்சாரி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

சுன்னத்துகளை சரியாக நிறைவேற்றினால் பெண் சமூகம் எவ்வளவு லாபமும் வலிமையும் பெறும் என்பதை நளினமாக விவரித்தார்கள்.

மாணவிகளின் கல்வியறிவு இச்சமூகத்திற்கு எப்படியெல்லாம் தேவைப்படுகிறது என்பதையும் அதை எப்படி பயன்படுத்துவது என்றும் விவரித்து பேசினார்கள் . உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் மாணவிகள் அனைவர்களும் கேட்டு அறிந்தார்கள்

முடிவில் பலநூறு மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் லால்பேட்டை ஹஸ்ரத் M Y. முஹம்மது அன்சாரி அவர்களின் கையினால் வழங்கினார்கள்.