14/10/2023 சனிக்கிழமை அன்று மாலை 6:00 மணி அளவில் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் அய்மான் சங்கம் சார்பாக நடத்திய மாணவர்களுக்கான பயிற்சி கருத்தரங்கத்தில் பேராசிரியர் டாக்டர் ஹுஸைன் பாஷா மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு பைத்துல்மால் தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீது தலைமை வகித்தார் பொதுச் செயலாளர் லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மிஷ்பாஹி முன்னிலை வகித்தார். துணை தலைவர் மதுக்கூர் அப்துல்லாஹ் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்தார். இறுதியாக துணை தலைவர் ஆவை A. S. முஹம்மது அன்சாரி அவர்கள் நன்றியுரை வழங்க இனிதே நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
மேலும் நிகழ்ச்சியில் பொருளாளர் பசுபதி கோயில் சாதிக் பாஷா, நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர், செயற்குழு உறுப்பினர் அம்பகரத்தூர் முஹம்மது கைசர், விழா குழு உறுப்பினர் காயல்பட்டினம் லெப்பை தம்பி மற்றும் மாணவர்களும் பெற்றோர்களும் திறளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.