உணவின்றி தவித்த 28 தொழிலாளர்களுக்கு ஊருக்கு திரும்ப அனுப்ப அய்மான் சங்கத்தினர் முயற்சி

129

தமிழ்நாட்டை சேர்ந்த 28 தொழிலாளர்கள் தங்களது கம்பெனியில் சம்பளம் தராமல் மற்றும் உணவின்றி தவித்த தொழிலாளர்களுக்கு மூன்றாவது நாளாக (நாள் 15/10/2023) உணவுகளை வழங்கி தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறப்பட்டு விரைவில் தமிழர்களை சொந்த ஊருக்கு திரும்ப அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளை அபுதாபி அய்மான் சங்கத்தினர், அல் அய்ன் இந்திய சமூக மையத்தின் நிர்வாகி முபாரக் முஸ்தபா, தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம் உறுப்பினர் எஸ்.எஸ். மீரான் உள்ளிட்டோர் இந்திய தூதரகம் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.

நிகழ்வில் அய்மான் சங்கத்தின் துணைத் தலைவர் ஆவை A.S. முகம்மது அன்சாரி தலைமையில், பொதுச் செயலாளர் லால்பேட்டை A முகம்மது அப்பாஸ் மிஸ்பாஹி மற்றும் பொருளாளர் பசுபதி கோவில் சாதிக் பாஷா கலந்து கொண்டார்கள்.