அபுதாபியில் புதுமை தமிழச்சி மற்றும் நியூஸ் 7 மீடியா இணைந்து வழங்கிய தங்க தாரகை விழா நிகழ்ச்சி நாள் : 04/11/2023 சனிக்கிழமை மாலை 5:00 மணி அளவில் அபுதாபி இந்தியன் சோசியல் சென்டரில் ( ISC ) சிறப்பான முறையில் நடைபெற்றது
விழாவின் தொடக்கமாக விருதுகள் வழங்கப்பட்டது. அது சமயம் அபுதாபி அய்மான் சங்கத்திற்கு அமீரகத்தில் செய்து வரும் சமூக நல மற்றும் மனிதநேய பணிகளை பாராட்டி சிறப்பு விருது வழங்கப்பட்டது
அதனை நிர்வாக செயலாளர் ஆடுதுறை முகம்மது அப்துல் காதர்-MAK அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.