அமீரக திமுக உறுப்பினர் இளையராஜா உடல் அனுப்பி வைப்பு

53
அமீரக திமுக உறுப்பினர் சகோதரர் இளையராஜா உடல்நலக் குறைவினால் 23-01-2024 அதிகாலை 3:15 மணியளவில் அபுதாபி ஷேக் கலீஃபா மருத்துவமனையில் காலமானார்.
அயலக தமிழர் நல வாழ் உறுப்பினரும்,அமீரக திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ்.மீரான்,அய்மான் சங்க தலைவர் கீழக்கரை H. M. முகம்மது ஜமாலுதீன் அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில்
அன்னாரின் பூத உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான தூதரகப் பணிகளை அபுதாபி தமிழ் மக்கள் மன்றத் தலைவர் திரு சிவக்குமார் அவர்கள் செய்தார்கள் மேலும், அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள் உறுதுணையாக இருந்து அனைத்து பணிகளும் செய்து நேற்று 23/01/2024 இரவு அபுதாபி விமான நிலையத்திலிருந்து ஏர் அரேபியா விமானத்தில் சென்னைக்கு உடலை அனுப்பி வைக்கப்பட்டது,
இன்று 24-01-2024 அதிகாலை சென்னை விமான நிலையத்தில் அயலக தமிழர் நல வாழ் உறுப்பினரும்,அமீரக திமுக பொறுப்பாளர் எஸ்.எஸ்.மீரான் அவர்கள் நேரில் சென்று அன்னாரின் பூத உடலை பெற்றுக் கொண்டு அவர்களின் குடும்பத்தார்களிடம் ஒப்படைத்தார்.
மேலும் சென்னை விமான நிலையத்திலிருந்து அவசர ஊர்தியில் புறப்பட்டு இறுதி காரியங்கள் செய்வதற்காக மறைந்த சகோதரர் இளையராஜா அவர்களின் சொந்த ஊரான ஆடுதுறை அருகில் 50 – சாத்தனூர் என்ற கிராமத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.