அபுதாபியில் கடலூர் மாவட்டம் தொழுதூர் திட்டக்குடியைச் சேர்ந்த சகோதரர் ராஜா முத்துசாமி அவர்கள் 23-01-2024 அன்று காலமானார்.
மறைந்த சகோதரர் ராஜா முத்துசாமி உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தர தமுமுக அபுதாபி மண்டல பொருளாளர் எமனேஸ்வரம் சர்புதீன் அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தூதரக அனைத்து பணிகளையும் நமது அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முகம்மது ஜமாலுதீன் அவர்களின் மேலான ஆலோசனையின் பெயரில் இரண்டு நாட்களாக கோல்டன் கிளாசிக் ஜெனரல் மெயின்டனன்ஸ் அலுவலக ஊழியர் திரு கோபி அவர்களுடன் இணைந்து தேவையான அனைத்து காரியங்களும் நமது செயற்குழு உறுப்பினர் கரம்மக்குடி முகம்மது அப்பாஸ் அவர்கள் செய்து கொடுத்தார்கள்.
அன்னாரின் பூத உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான அனைத்து பணிகளும் நிறைவு பெற்றதையடுத்து, இன்று 26/01/2024 இரவு அபுதாபி விமான நிலையத்திலிருந்து ஏர் அரேபியா விமானத்தில் சென்னைக்கு உடலை அனுப்பி வைக்கப்பட்டது,
அய்மான் சங்க தலைவர் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் அவர் வேலை செய்த நிறுவனம் மற்றும் குடும்பத்தார்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள்