27/1/2024 அன்று திருச்சி அய்மான் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியின் 12 மற்றும் 13வது முபல்லிகா பட்டமளிப்பு விழா கல்லூரி தலைவரும் கீழக்கரை டவுன் காஜியுமான மவ்லவி முனைவர் காஜி காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீகி தலைமையில் நடைபெற்றது.
கல்லூரி பொருளாளர் ஹாஜி சிடிசன் அப்துல் மஜீத், கல்லூரியின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் ஹாஜி முஹம்மது குலாம், ஹாஜி அன்சாரி பாட்ஷா முன்னிலை வகித்தனர்.
அரபுத்துறை பேராசிரியர் பீருன்னிஷா கிராஅத் மற்றும் தமிழாக்கம் செய்தார்.
கல்லூரி முதல்வர் முனைவர் வானி வரவேற்புரை நிகழ்த்தினார்.
திருச்சி முஸ்லிம் இலக்கிய கழக தலைவரும் கல்லூரியின் ஆட்சிமன்றக்குழு உறுப்பினருமான ஹாஜி முஹம்மது உஸ்மான், கல்லூரி முன்னாள் இயக்குனர் முனைவர் ஷாஹுல் ஹமீது வாழ்த்துரை வழங்கினர்.
ஜமால் முஹம்மது கல்லூரி அரபுத்துறை பேராசிரியர் மவ்லவி ஹாஃபிள் செய்யது அஹ்மது நெய்னா ஜமாலி சிறப்புரையாற்றினார்.
கடையநல்லூர் ஃபைஜுல் அன்வார் அரபுக் கல்லூரி முதல்வரும் தென்காசி மாவட்ட அரசு காஜியுமான மவ்லவி முஹ்யித்தீன் ஃபைஜி ஃபாஜில் ரஷாதி சிறப்பு பேருரை நிகழ்த்தினார்.
கல்லூரி தலைவரும் இஸ்லாமிய கல்வித் துறை இயக்குனருமான மவ்லவி முனைவர் காஜி காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீகி முபல்லிகா பட்டங்களை வழங்கினார்.
கல்லூரி துணை முதல்வர் பேராசிரியை பஹமிதா தபசீம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் சமுதாய பிரமுகர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் மாணவியர்கள், கலந்துகொண்டு சிறப்பித்தனர்.