திருச்சி அய்மான் மகளிர் கல்லூரி விளையாட்டு விழா

54
24.1.2024 அன்று திருச்சி அய்மான் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி வருடாந்திர விளையாட்டு விழா கல்லூரி தலைவர் கீழக்கரை டவுன் காஜி முனைவர் காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீக்கி தலைமையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் வானி வரவேற்றார்.
கல்லூரி தாளாளர் ஹாஜி ஹபிபுல்லாஹ் வாழ்த்துரை வழங்கினார்.
கல்லூரி பொருளாளர் ஹாஜி சிட்டிசன் அப்துல் மஜீத், ஹாஜி குலாம் முஹம்மது முன்னிலை வகித்தனர் .
பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை பேராசிரியர் முனைவர் மஹ்பூப் ஜான் சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
உடற்பயிற்சி கல்வி இயக்குனர் முனைவர் பிரியா நன்றி கூறினார்