அய்மான் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

36
அய்மான் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் LLH கட்டணமில்லா மருத்துவ சலுகை அட்டை வழங்கும் நிகழ்ச்சி.
அய்மான் சங்க உறுப்பினர்களுக்கு 2024-2025 வருடத்திற்கான சுமார் 1500 குடும்பங்களுக்கு LLH மருத்துவமனை நிர்வாகம் இலவச மருத்துவ முகாம் மற்றும் LLH Privilege Fast Service card வழங்கும் நிகழ்ச்சி
அபுதாபியில் வசிக்கக்கூடிய அனைத்து அய்மான் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு LLH மருத்துவ மனை நிர்வாகம் ஜீவன் ரக்க்ஷா எனும் Privilege Fast Service card 2024-2025 வருடத்திற்கான அய்மான் சங்கத்தில் முன் பதிவு செய்த நபர்களுக்கு வழங்கப்பட்டது
இறைவனின் மாபெரும் கிருபையினால் நாள் *28/02/2024* ஞாயிற்றுக்கிழமை அன்று பிரிவில்லேஜ் கார்டு வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் காலை 10 முதல் மாலை 4 வரை எலக்ட்ரா ரோட்டில் அமைந்துள்ள LLH மருத்துவமனை கட்டிடத்தில் உள்ள mezzanine தளத்தில் மிக சிறப்பானமுறையில் நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் அய்மான் தலைவர் கீழக்கரை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுத்தீன் அவர்களின் ஆலோசனைப்படி அய்மான் சங்கத்தின் பொதுச் செயலாளர் லால்பேட்டை A முகம்மது அம்பாஸ் மிஸ்பாஹி,சங்கத்தின் துணைத் தலைவர்கள் ஆவை A. S. முகம்மது அன்சாரி, மதுக்கூர் Y. M. அப்துல்லாஹ்
உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்கள்
மேலும் நிகழ்ச்சியில் பைத்துல் மால் தலைவர் A. ஷாகுல் ஹமீது, துணைத் தலைவர் கீழக்கரை ஷேக் பரீத், மக்கள் தொடர்பு செயலாளர் காயல்பட்டினம் ரிபாயி அவர்களும், சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முகம்மது அப்துல் காதர் அவர்களும், பொருளாளர் பசுபதி கோயில் சாதிக் பாஷா , ஊடகத் துறை செயலாளர் தேவிப்பட்டிணம் ஹாஜா முபீனுத்தீன், நிர்வாக செயற்குழு உறுப்பினர் கீழக்கரை அஜ்மல் தாஹிர்,செயற்குழு உறுப்பினர் திருநெல்வேலி முகம்மது ஹுசைன், விழா குழு உறுப்பினர் லெப்பை தம்பி அவர்களும் உடன் இருந்தார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கு அய்மான் சங்கத்தின் சார்பாக LLH மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள்.
இதேபோன்று ஏற்கனவே அய்மான் சங்க உறுப்பினர்களுக்கு கடந்த 2023-2024 வருடம் 1050 குடும்பங்களுக்கு LLH மருத்துவமனை நிர்வாகம் இலவச மருத்துவ முகாம் மற்றும் Privilege Fast Service card வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.