அய்மான் சங்கம் நடத்திய புனித மிஃராஜ் இரவு நிகழ்ச்சி

90
அய்மான் சங்கத்தின் சார்பில் புனித மிஃராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதம் பிறை- 27 ல் மிக சிறப்பாக நடைபெறும், அதே போன்று இந்த வருடமும் 07-02-2023 புதன்கிழமை அன்று மாலை 7:45 மணியளவில் அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் -MAK தொகுத்து வழங்க, சங்கத்தின் உறுப்பினர் நிஹ்மத்துல்லா அவர்கள் திருக்குர்ஆன் வசனங்களை ஓதி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
இந் நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர், கீழக்கரை அல்ஹாஜ் H. M.முஹம்மது ஜமாலுத்தீன் தலைமை வகிக்க, சங்கத்தின் துணைத் தலைவர் ஆவை A. S. முஹம்மது அன்சாரி அவர்கள் வரவேற்பு வழங்கினார்கள்.
அய்மான் பைத்துல்மால் தலைவர் அதிரை அல்ஹாஜ் A. ஷாஹுல் ஹமீது அவர்கள் அய்மான் சங்கத்தின் பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்களை முன்னுரையாக வழங்கினார்கள்.
புனித மிஃராஜ் இரவின் முன்னுரையை மௌலானா மௌலவி அப்ழலுல் உலமா M.கலீலுர் ரஹ்மான் ஆலிம் பிலாலி அவர்கள் வழங்க நிகழ்ச்சியின் சிறப்புரையை துபாய் சுன்னத் வல் ஜமாத் பேரவை தலைவரும், இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் துபாய் தலைவருமாகிய முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மது மஹ்ரூஃப் அவர்கள் புனித இரவின் படிப்பினைகளை சிறப்பாக வழங்கினார்கள்
அய்மான் சங்கத்தின் தலைவர், கீழக்கரை H. M.முஹம்மது ஜமாலுத்தீன் மற்றும் பைத்துல்மால் தலைவர் அதிரை அல்ஹாஜ் A. ஷாஹுல் ஹமீது அவர்களும் முஹிப்புல் உலமா கீழக்கரை முஹம்மது மஹ்ரூஃப் அவர்களுக்கு பொன்னாடை அனுவித்து கௌரவித்தார்கள்.
இச் சிறப்பான நிகழ்ச்சியில் ஈரோடு ஜமால் முஹம்மது எழுதிய தியாகச்சுடர் திப்பு சுல்தான் என்ற நூல் வெளியிடப்பட்டது.
மேலும் கடந்த வாரம் உம்ரா பயணத்தை முடித்து அபுதாபி வந்த சங்கத்தின் விழா குழு உறுப்பினர் காயல் லெப்பை தம்பி அவர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவாக சங்கத்தின் துணைத் தலைவர் மதுக்கூர் Y. M. அப்துல்லாஹ் நன்றியுரை வழங்க
துணைத் தலைவர் காதர் மீரான் பைஜீ அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
இந்த நிகழ்ச்சியில், அபுதாபி ஜமாத்துல் உலமா சபை, அபுதாபி மௌலித் கமிட்டி, அபுதாபி லால்பேட்டை ஜமாத் ,அமீரக காயிதே மில்லத் பேரவை உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகளும் , துபாயின் சமூக சேவகர் முதுவை ஹிதாயத், திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முகையதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை அய்மான் சங்கத்தின் பொதுச் செயலாளர் லால்பேட்டை A. முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, சங்கத்தின் பொருளாளர் பசுபதிகோவில் சாதிக் பாட்சா, செயற்குழு உறுப்பினர்கள் திருநெல்வேலி முஹம்மது ஹுசைன், கீழக்கரை அஜ்மல் தாஹிர், ராஜபாளையம் இப்ராஹிம், குத்தாலம் நவ்சாத் அலி மற்றும் விழா குழு உறுப்பினர் லெப்பை தம்பி உள்ளிட்டோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.