அய்மானின் ரமலான் பணிகள்! பகுதி -1

0
291
Muslim man is praying in mosque

உலக சரித்திரத்தில் பெரும் சரிவை சந்தித்து வரக் கூடிய கொரோனா லாக் டவுன் காலகட்டத்தில் இவ்வருடம் ரமலான் மாதம் துவங்கிய நாள் முதல் அய்மானின் உதவிக்கரம் அமீரகத்திலும்,
எண்ணற்ற விளிம்பு நிலை மக்களை கொண்ட தாயகத்திலும் இறைவன் அருளால் பெரும் அளவில் உணவுப் பொருட்களையும்,பொருளாதார உதவிகளையும் அய்மான் சங்கம் மற்றும் அய்மான் பைத்துல் மால் இணைந்து வழங்கியது.

அமீரகத்தில் வேலை இழந்தவர்கள், சுற்றுலா விசாவில் வந்து தாயகம் செல்ல முடியாமல் கஷ்டப்படும் பலரை கண்டறிந்து பொருளாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

அபுதாபி புறநகர் பகுதிகளான பனியாஸ் மற்றும் அல்-ரீம் ஆகிய இருமுகாம்களில் உள்ள பணியின்றி இருக்கும்
தமிழக சகோதரர்களுக்கு அய்மான் செலவில் உணவு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டது.

மற்றும் சில முகாம்களுக்கு அபுதாபி சமுதாயப் புரவலர் மூலம் உணவு சென்றடைய ஏற்பாடு செய்யப்பட்டது.

தாயகத்தில் மூன்று வெவ்வேறு பகுதிகளில் லாக்டவுன் துவக்க காலத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டதோடு

சென்னை
கோவை
திருச்சி
ஈரோடு
பள்ளப்பட்டி
மங்கலம்பேட்டை
சிதம்பரம்
கொள்ளிடம்
விருதாச்சலம்
பூதலூர்
கோட்டக்குப்பம்
லால்பேட்டை
கொள்ளுமேடு
உள்ளிட்ட பகுதிகளில் தேவையுடையவர்களை கண்டறிந்து அய்மான் பைத்துல் மால் மூலம் உதவிகள் வழங்கப்பட்டன.

பல்வேறு நிலைகளில் சமுதாய, சமூகப் பணிகளில் அர்ப்பணித்து பணியாற்றி 41-ம் ஆண்டை நோக்கிப் பயணிக்கும் அய்மான் சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று கொடையளித்த சமுதாயப் பெருமக்களுக்கு இதயம் கனிந்த நன்றிகள்.

அய்மான் வெள்ளி விழா முழக்கம்: ஏழைகளை நேசிப்போம்!

அய்மான் சங்கம். அபுதாபி.