சர்வதேச புத்தக அரங்கில் முதல்முறையாக 7தமிழ் பதிப்பகங்கள் தமிழ் புத்தக அரங்குகளை அமைத்துள்ளனர் அவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தும் விதமாக துபாய் ஈமான் கலாச்சார அமைப்பின் சார்பில் பாராட்டு விழா நாள் 09/11/2023 வியாழக்கிழமை மாலை 8:00 மணி அளவில் துபாய் அன்னபூர்ணா உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் அய்மான் சங்கத்தின் சார்பாக நிர்வாகிகள் பங்கேற்று ஈமான் கலாச்சார மையம் அமீரகத்தில் செய்து வரும் சமூக நல பணிகளை பாராட்டி அதன் தலைவர் அல்ஹாஜ் கீழக்கரை ஹபிபுல்லாஹ் ஹாஜியார் அவர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது நிகழ்வில் ஈமான் பொதுச் செயலாளர் கீழக்கரை ஹமீது யாசின் அவர்கள் உடன் இருந்தார்கள்
இந்நிகழ்ச்சியில் அமீரகத்தில் உள்ள சமூக அமைப்புகள்,எழுத்தாளர்கள், தமிழ் சங்கங்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஈமான் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தார்கள்.


















