அயலக தமிழர்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

0
142
அபுதாபியில் வாழக்கூடிய தமிழ் சொந்தங்களுக்கு அயலக தமிழர்களுக்கான சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நாள் 10-05-2025 அன்று அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிகள் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முஹம்மது ஜமாலுதீன் அவர்கள் தலைமை வகித்தார்கள்
நிகழ்ச்சியை: சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை முகம்மது அப்துல் காதர் தொகுத்து வழங்கினார்
ஆரம்பமாக அதிரை ஹாபில் பfவ்ஜான் அவர்கள் இறை வசனம் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்,
பைத்துல் மால் தலைவர் அதிரை A. சாகுல் ஹமீது ஹாஜியார் அய்மான் முன்னுரை வழங்கினார்
தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முஹம்மது தாரீக் அவர்கள் அயலக தமிழர்களுக்கான கீழ்க்கண்ட சட்ட விழிப்புணர்வு வழங்கினார்கள்.
NRI சொத்து உரிமைகள் மற்றும் பிரச்சனைகள்
அதிகாரப் பத்திரம் மற்றும் பரம்பரை சட்டங்கள்
குடும்ப சட்டம் திருமணம் விவாகரத்து குழந்தை பாதுகாப்பு மேலும் கேள்வி பதில்களோடு பல விஷயங்கள் கலந்துரையாடப்பட்டன.
மேலும் துபாய் சல்மான் பாரிஸ் அண்ட் கோ நிறுவனத்தின் தலைவர் ஆடிட்டர் சல்மான் பாரிஸ் அவர்கள் இந்தியா வரிவிதிப்பு மற்றும் நிதி சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்கள்
மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு அய்மான் சங்கம் சார்பில் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அபுதாபியில் வாழக்கூடிய தமிழ் மக்கள் வெகுத்திரலாக கலந்து கொண்டார்கள்.
இறுதியாக நன்றியுரை அய்மான் சங்கத்தின் துணைத் தலைவர் ஆவை ஏ எஸ் முகம்மது அன்சாரி அவர்கள் வழங்க லால்பேட்டை மௌலானா மௌலவி ரஷீத் ஃபைஜி அவர்களுடைய துவாவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here