சிங்கப்பூர் சென்றடைந்த அபுதாபி அய்மான் சங்க தலைவர் முஹம்மது ஜமாலுதீன் ஹாஜியார் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு!
சிங்கப்பூர் வருகை தந்த அமீரகத் தாய்ச் சபையாம் அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் முஹம்மது ஜமாலுதீன் ஹாஜியார் அவர்களுக்கு பிஸ்மி வானொலி சார்பில் அதன் தலைவர் சீனி ஜாபர் கனி அவர்கள் ஏற்பாட்டில் வரவேற்பு மற்றும் இரவு விருந்து 29/05/2025 வியாழன் பின்னேரம் இரவு எட்டு மணிக்கு குற்றாலம் பார்டர் பரோட்டா உணவகத்தில் நடைபெற்றது.
முஹம்மது ஜமாலுதீன் ஹாஜியார் அவர்களுக்கு பிஸ்மி வானொலி தலைவர் சீனி ஜாபர் கனி, சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை தலைவர் அ. முஹம்மது பிலால் ஆகியோர் பொன்னாடை போர்த்தி அய்மான் சங்க சேவைகளுக்கு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
முஸ்லிம் லீக் சிங்கப்பூர் சமூக சேவை அமைப்பின் தலைவர் புதிய நிலா மு.ஜஹாங்கீர், ஜாமியா சிங்கப்பூர் இயக்குநர் முனைவர் எச். எம். சலீம், சிங்கப்பூர் தமிழ் முஸ்லிம் ஜமாஅத் தலைவர் முஹம்மது கௌஸ், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர்) தலைவர் முனைவர் எம். ஏ. காதர், சிராங்கூன் டைம்ஸ் முதன்மை ஆசிரியர் ஷாநவாஸ், குற்றாலம் பார்டர் பரோட்டா (சிங்கப்பூர்) உரிமையாளர் ஷஹாபுதின், பிஸ்மி வானொலி அதிகாரி ஜலாலுதீன் PBM, அபுல் ஹசன் அப்துல் ஜப்பார், சீனி ஜஹாங்கீர், லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் வரவேற்பு மற்றும் இரவு விருந்தில் கலந்து கொண்டனர்.





















