அமீரகத் தலைநகர் அபுதாபியில் உணவு மற்றும் இருப்பிடம் இன்றித் தவித்த தமிழகத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள், கருப்பையா பரமசிவம், முத்துக்குமரன் நடராஜன் ஆகியோரை, அபுதாபி அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து, அவர்களை பரிவுடன் மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தனர்.
அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் தாயகம் திரும்புவதற்கான அனைத்து ஏற்படுகளையும் அய்மான் சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் உடை ஏற்பாடுகளை ராமநாதபுரத்தைச் சேர்ந்த அய்மான் சங்க சகோதரர்கள் மூலம் செய்து வருகின்றார்கள்.
மீட்டெடுக்கப்பட்ட சகோதரர்கள் இருவரும் தற்போது நலமுடன் இருக்கிறார்கள்.
அவர்கள் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகின்றது.
இது போன்று அமீரகத்தில், குறிப்பாகத் தலைநகர் அபுதாபியில் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்டெடுத்து அவர்களை இந்திய தூதரகத்தின் உதவியுடன் தாயகத்திற்கு அனுப்பி வைக்கின்ற நற் பணியை கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அய்மான் சங்கம் செய்து வருகின்றது.



















