10/9/2025 அன்று திருச்சி அய்மான் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியில் உத்தம நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் உதய தின மீலாது விழா கல்லூரியின் தலைவர் கீழக்கரை டவுன் காஜி மவ்லவி முனைவர் காஜி காதர் பக்ஸ் ஹுசைன் சித்தீகி தலைமையில் நடைபெற்றது.
கல்லூரி பொருளாளர் சிட்டிசன் ஹாஜி அப்துல் மஜீத் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் முனப்பர் ஹுசைனா வரவேற்றார். முன்னாள் இயக்குனர் முனைவர் ஷாஹுல் ஹமீது வாழ்த்துரை வழங்கினார்.
தூத்துக்குடி மன்பவுஸ் ஸலாஹ் அரபுக் கல்லூரி முதல்வர் மவ்லவி இம்தாதுல்லாஹ் பாஜில் பாகவி சிறப்புரையாற்றினார்.
பல போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
பேராசிரியைகள், மாணவியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி இயக்குனர் பேராசிரியர் பஹமிதா தபசிம் நன்றி கூறினார்.




















