அபுதாபியில் மரணித்த சிவக்குமார் உடல் தமிழகத்திற்கு அனுப்பி வைப்பு

0
39
அபுதாபியில் மரணித்த சகோதரர் சிவக்குமார் உடல் தமிழகத்திற்கு 21-09-2025 அனுப்பி வைக்கப்படுகிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக ஒரு சில காரணங்களினால் அபுதாபியில் தற்கொலை செய்து கொண்ட தமிழ்நாடு காட்பாடியை சேர்ந்த சகோதரர் சிவக்குமார் நாராயணசாமி அவர்களின் உடலை தாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறு அய்மான் சங்கத்திடம் அவர்களின் குடும்பத்தார்கள் கேட்டுக் கொண்டார்கள்.
அதன் அடிப்படையில் உடலை தாயகம் அனுப்பி வைப்பதற்கான வேலைகள் நடைபெற்றன. அவர் வேலை செய்த பழைய கம்பெனியிலிருந்து விலகி புதிய கம்பெனியில் ஒரு நாள் மட்டுமே வேலை செய்து பிறகு வேளைக்கு போகாமல் கிடைத்த வேலையும் ரத்து செய்யப்பட்டு அவருடைய கடவுச்சீட்டு கையில் இல்லாமல் பல்வேறு பிரச்சனைகளுக்குப் பிறகு இன்று அவருடைய உடல் இன்று 21-09-2025 இரவு அபுதாபி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இறைவனின் நன்மையை நாடி உழைத்த அய்மான் நிர்வாகிகள், மரணித்த சிவக்குமார் அவர்களின் குடும்ப நண்பர்கள், அவர் வேலை செய்த பழைய கம்பெனியில் வேலை செய்த நண்பர்கள், அமீரக காவல்துறை அதிகாரிகள், இந்திய தூதரகத்தின் அதிகாரிகள் அனைவருக்கும் அய்மான் சங்கத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here