அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் நாள் 07-12-2025 அன்று மாலை 8:00 மணியளவில் அபுதாபி கிராண்ட் நல்லாஸ் ஆப்பக்கடையில் நடைபெற்றது.
நிகழ்வில் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முஹம்மது ஜமாலுதீன் அவர்கள் தலைமை வகித்தார்கள். நிகழ்வில் பல்வேறு விஷயங்கள் மற்றும் எதிர்வரும் நிகழ்ச்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.
மேலும் நிகழ்வில் சகோதரர் கட்டுமாவடி தஸ்தகீர் இப்ராஹிம் அவர்களை பொருளாளராகவும், துணை ஊடகச் செயலாளராக நெல்லை உசேன் அவர்களும் அனைத்து நிர்வாகிகள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
நிகழ்ச்சி ஆலிம் ஹுசைன் மக்கி மஹ்ழரி அவர்களின் துஆவுடன் நிறைவு பெற்றது.



















