அபுதாபியில் அய்மான் சங்கம் ஏற்பாடு செய்த ஹிஜ்ரா இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்ச்சி 21/09/2017 வியாழக்கிழமை மாலை 7:30 மணிக்கு இந்தியன் இஸ்லாமிக் சென்டரில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத் தலைவர் களமருதூர் ஹாஜி ஜெ.ஷம்சுத்தீன் தலைமை வகித்தார்.
நாகூர் ஹாபிழ் இத்ரீஸ் மரைக்காயர் திருக்குர்ஆன் வசனங்கள் ஒதினார்.
அய்மான் சங்க செயலாளர் கொள்ளுமேடு முஹம்மது ஹாரிஸ் மன்பஈ வரவேற்றுப் பேசினார்.
மெளலவி,ஹாபிழ் அப்துல் மஜீத் நூரானி துவக்கவுரை நிகழ்த்தினார்.
பனியாஸ் பில்டிங் மெட்டீரியல்ஸ் நிறுவன அதிபர் ஹாஜி.அப்துல் ஹமீத் மரைக்காயர், துபாய் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீத் யாசின், ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் இந்தியன் இஸ்லாமிக் சென்டர் நிர்வாக செயலாளர் அப்துர் ரஹ்மான் தங்ஙள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அய்மான் சங்கத்தின் சமீபத்திய பணிகளை விளக்கி அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல்SAC ஹமீது உரையாற்றினார்.
பன்னூல் ஆசிரியர் மெளலவி பாஷா ரஷாதி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் மெளலவி பாஷா ரஷாதி அவர்கள் எழுதிய “மாநபி (ஸல்) அவர்களின் மாபெரும் மாண்பு” என்கிற நூலை அய்மான் சங்கத் தலைவர் ஷம்சுத்தீன் ஹாஜி வெளியிட அய்மான் சங்க பொருளாளர் கீழை.ஜமாலுத்தீன், அய்மான் சங்க ஷார்ஜா பிரதிநிதி ஜனாப்.தீபி, அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் பொதுச் செயலாளர் சிராஜுல் அமீன், அமீரக தமிழ் மன்ற நிர்வாகி பிர்தவ்ஸ் பாஷா, விருத்தாசலம் ஷாஹுல் ஹமீத்,அய்யம்பேட்டை ஜாபர் அலி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியை அய்மான் சங்க துணைப் பொதுச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி தொகுத்து வழங்கினார்.
இறுதியாக அய்மான் சங்க செயற்குழு உறுப்பினர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி நன்றி கூற பெரியப்பட்டிணம் மெளலவி ஷர்ஃபுத்தீன் மன்பஈ துஆவுடன் நிறைவடைந்தது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அய்மான் சங்க நிர்வாகிகளான லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, பூந்தை ஹாஜா மைதீன், பசுபதி கோவில் சாதிக் பாட்ஷா, ஆடுதுறை அப்துல் காதர், காயல் ஷேக் ஹமீது, லெப்பை தம்பி, லால்பேட்டை முஹம்மது இஸ்மாயில் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்