கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் விநியோகிக்க அபுதாபி அய்மான் சங்கம் முடிவு செய்து, அதை சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அய்மான் பைதுல்மால் மூலம் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி *அபுதாபியில் பொதுமக்களிடமும் அபுதாபி மெளலிது கமிட்டி நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மூலமாகவும்* திரட்டப்பட்ட பணத்திலிருந்து நிவாரணப் பொருட்களை வாங்கி மொத்தமாக 24-11-18 அன்று அதிராம்பட்டினம் எடுத்து செல்லப்பட்டது.
சுமார் 1000 பேருக்கு நிவாரண உதவிப் பொருட்களும் உணவு பொட்டலங்களும் வழங்கும் வகையில் தயார் செய்யப்பட்டது.
இதில்
*சோலார் விளக்கு*
*அரிசி பாக்கெட்*
*பருப்பு பாக்கெட்*
*பிஸ்கட் பாக்கெட்*
*ரஸ்க்*
*கொசு வர்த்திகள்*
*சானிடரி நேப்கின்*
மற்றும் *மெழுகுவர்த்திகள்*
அடங்கிய பைகள் வழங்கப்பட்டு வருகிறது.
*அதிராம்பட்டினம்,*
*மழவேனிர்காடு,*
*பழஞ்சூர்,*
*ராசியங்காடு,*
*மிலாரிக்காடு,*
*புதுக்கோட்டை உள்ளூர்,*
*தம்பிக்கோட்டை*
போன்ற அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் 24-11-18 முதல் பொருட்கள் விநியோகிக்கப்பட்டது.
மேலும் சிலருடைய பாதிக்கப்பட்ட குடிசைகளை சீர்செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அய்மான் பைத்துல் மால் தலைவர் *அதிரை.ஏ.ஷாஹுல் ஹமீது* அவர்களின் மேற்பார்வையில் இச்சீரிய பணி பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரையும் அரவணைத்து மத வேறுபாடு பாராமல் சிறப்பாக நடந்து வருகிறது.