அய்மானின் முன்னாள் தலைவர் முனைவர் காதர் பக்ஸ் அவர்களை உளமார வாழ்த்துகிறது அய்மான்!

153

லண்டன் உலக தமிழ் செம்மொழி பல்கலைக் கழகம், அய்மான் சங்கத்தின் மேனாள் தலைவரும்,அய்மான் மகளிர் கல்லூரி இஸ்லாமிய மார்க்கத்துறை இயக்குனரும்,கீழக்கரை நகர டவுன் காஜியுமான அல்ஹாஜ் ஏ.எம்.எம்.காதர் பக்ஸ் ஹுஸைன் சித்தீகி அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

பன்னெடுங்காலமாக இஸ்லாமிய வரலாற்று ஆய்வுகளை திறம்பட மேற்கொண்டமைக்காக,
இந்த டாக்டர் பட்டம் பெற்ற காதர் பக்ஷ் ஹாஜி அவர்கள், இப்பட்டத்தை பெறுவதற்கான அனைத்து தகுதிகளும் தன்னகத்தே அமையப் பெற்றவர்.

மொழிப் புலமை, வரலாறு, பொதுவாழ்வு, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, தலைமை பண்புகள் நிறைந்த நிதானம் மிக்க வழிகாட்டி என தன் பண்புகளையும், தகுதிகளையும் கடின உழைப்பால் பட்டைதீட்டி மின்னியவர்.

அல்ஹாஜ் ஏ.எம்.எம்.காதர் பக்ஸ் ஹுஸைன் சித்தீகி அவர்கள் மேலும் பல சிறப்புகள் பெற்று சமுதாயத்திற்கு பணியாற்றி சிறக்க அய்மான் சங்கம் அகம் மகிழ வாழ்த்துகிறது.

அய்மான் சங்கம் – அபுதாபி
தலைவர் மற்றும் நிர்வாகிகள்