அய்மான் சங்கத்தின் சார்பில் அபுதாபியில் ஒவ்வொரு வருடமும் மிகச் சிறப்பான முறையில் மீலாது நபி விழா நடைபெறும் அதேபோல் இந்த வருடமும் நாள் 28-09-3023 அன்று மீலாது நபி விழா நிகழ்ச்சி அபுதாபியில் இந்தியன் இஸ்லாமிக் சென்டர் மிக சிறப்பான முறையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிகள் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முஹம்மது ஜமாலுதீன் அவர்கள் தலைமை வகித்தார்கள்
நிகழ்ச்சியை: சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை முகம்மது அப்துல் காதர் தொகுத்து வழங்கினார்
ஆரம்பமாக சங்கத்தின் செயலாளர் கீழக்கரை A. H. சயீத் முஹம்மது பாசில் இறை வசனம் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார், பொதுச் செயலாளர் மெளலவி A. முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி வரவேற்புரை வழங்கினார்
பைத்துல் மால் தலைவர் அதிரை A. சாகுல் ஹமீது ஹாஜியார் அய்மான் முன்னுரை வழங்கினார்
மார்க்கத்துறை செயலாளர் மௌலவி S. M. B ஹுசைன் மக்கி ஆலிம் மஹ்ழரி துவக்க உரை வழங்கினார்
தாயகத்திலிருந்து வருகை புரிந்துள்ள டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளையின் மாநில நிறுவனர் முனைவர் R. ஜெயராஜ் அவர்கள் அய்மான் சங்கத்தின் சேவைகளை பாராட்டி தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு விருதுகளை வழங்கினார்.
காயல்பட்டினம் அல் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா பேராசிரியர் மௌலவி M.A. ஹபீபுர் ரஹ்மான் ஆலிம் மஹ்ழரி மற்றும் காயல்பட்டணம் முஅஸ்கருர் ரஹ்மான் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனர் மௌலவி H.A. அஹ்மது அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரி சிறப்புரை வழங்கினார்கள்
அய்மான் சங்கத்தின் துணை தலைவர் காதர் மீரான் fபைஜீ அவர்கள்ளின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அபுதாபி லால்பேட்டை ஜமாத் நிர்வாகிகள் , காயல்பட்டினம் நல மன்றம் நிர்வாகிகள், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க அமீரக அமைப்பின் பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், மர்ஹபா நலப் பேரவை நிர்வாகிகள், அபுதாபி மவ்லூது கமிட்டி நிர்வாகிகள், அபுதாபி ஜமாத் உலமா நிர்வாகிகள் மற்றும் சமூக சேவகர் முதுவை ஹிதாயத்துல்லாஹ் அவர்களும் மேலும் துபாய் & அபுதாபியில் வாழக்கூடிய தமிழ் மக்கள் வெகுத்திரலாக கலந்து கொண்டார்கள்.