20 /10/2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5:00 மணி அளவில் அபுதாபி சுஜி பேஷன், டிசைனிங் & டைலரிங் வளாகத்தில் அய்மான் சங்கம் மற்றும் சுஜி பேஷன், டிசைனிங் & டைலரிங் சார்பாக நடத்திய பெண்களுக்கான பயிற்சி கருத்தரங்கத்தில் பேராசிரியர் டாக்டர் ஹுஸைன் பாஷா தமிழ் சொந்தங்களுக்கு பின்வரும் தலைப்புகளில் ஆலோசனைகளை வழங்கினார்.
*பிள்ளைகளின் மனம் அறிய*
*இளைய சமுதாய பிள்ளைகளை மேம்படுத்த*
*பதின்பருவ மேலாண்மை*
*மன அமைதி மேலாண்மை நுட்பங்கள்*.
நிகழ்ச்சிக்கு பைத்துல்மால் தலைவர் அதிரை A. ஷாஹுல் ஹமீது தலைமை வகித்தார், மார்க்கதுறைச் செயலாளர் S. M. B. உசைன் மக்கி மஹ்ழரி முன்னிலை வகித்தார். துணை தலைவர் மதுக்கூர் அப்துல்லாஹ் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்திருந்தார். இறுதியாக சுஜி பேஷன், டிசைனிங் & டைலரிங் நிறுவனர் திருமதி.சுஜாதா ராஜ்குமார் அவர்களின் மகள் செல்வி.ஷன்மதி ராஜ்குமார், நன்றியுரை வழங்க இனிதே நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
மேலும் நிகழ்ச்சியில் அபுதாபியில் வாழக்கூடிய தமிழ் பெண்கள்/ தாய்மார்கள் திறளாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.