அய்மான் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் கட்டணமில்லா மருத்துவ சலுகை அட்டை வழங்கும் நிகழ்ச்சி

0
57
அய்மான் சங்கம் சார்பில் அபுதாபியில் வசிக்கக்கூடிய அனைத்து அய்மான் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு இலவச மருத்துவ முகாம் மற்றும் அல் அஹலியா கட்டணமில்லா மருத்துவ சலுகை அட்டை (Privilege Fast Service card) வழங்கும் நிகழ்ச்சி நாள் *06/10/2024* ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4:00 மணி முதல் 8:00 மணி வரை அபுதாபி ஹம்தான் ரோட்டில் அமைந்துள்ள அல் அஹலியா மருத்துவமனை கட்டிடத்தில் உள்ள mezzanine தளத்தில் மிக சிறப்பானமுறையில் நடைபெற்றது.
இன் நிகழ்ச்சியில் 2024-2025 வருடத்திற்கான இரண்டாம் கட்டமாக சுமார் 200 குடும்பங்களுக்கு அல் அஹலியா மருத்துவமனை சார்பில் கட்டணமில்லா மருத்துவ சலுகை அட்டை (Privilege Fast Service card) நேரடியாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அய்மான் தலைவர் கீழக்கரை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுதீன் தலைமை வகித்தார்கள் பைத்துல் மால் தலைவர் அதிரை எ.சாகுல் ஹமீது,பொதுச்செயலாளர் லால்பேட்டை ஏ.முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, துணைத் தலைவர் காதர் மீரான் பைஜி, நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்கள்.
நிகழ்ச்சியில் இந்த வருடத்திற்கான முதல் பிரிவில்லேஜ் கார்டை அல் அஹலியா மருத்துவமனையின் உறவு மேப்பாட்டு அதிகாரி மதிப்புக்குரிய சிஜோ ஜார்ஜ் அவர்கள் வழங்க அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை ஹெச். எம். முகம்மது ஜமாலுதீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்
மேலும் பொது மருத்துவர், ஹோமியோபதி மருத்துவர் நதியா, மற்றும் ஆயுர்வேத மருத்துவர் ஆதார்ஷா அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்
அதனைத் தொடர்ந்து மருத்துவமனையின் அப்துல் கரீம் , நிர்வாகி அஜில் பாலா, அவர்களுக்கு அய்மான் சங்கத்தின் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் ஊடகத் துறை செயலாளர் தேவிப்பட்டிணம் ஹாஜா முபீனுத்தீன், நிர்வாக செயற்குழு உறுப்பினர் கீழக்கரை அஜ்மல் தாஹிர்,செயற்குழு உறுப்பினர்கள் திருநெல்வேலி முகம்மது ஹுசைன், கட்டுமாவடி தஸ்தகீர் இப்ராகிம், அம்பகரத்தூர் முஹம்மது கைசர், கிளாங்காடு அப்பாஸ் முகம்மது இப்ராஹீம், மங்கலம்பேட்டை சுலைமான் சேட்டு விழா குழு செயலாளர்கள் லெப்பை தம்பி, ஷாஜஹான் அவர்களும் உடன் இருந்தார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கு அய்மான் சங்கத்தின் சார்பாக அல் அஹலியா மருத்துவமனை நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்கள்.
இதேபோன்று ஏற்கனவே அய்மான் சங்க உறுப்பினர்களுக்கு கடந்த ஜூலை மாதம் 2024-2025 வருடத்திற்கான 1000 குடும்பங்களுக்கு அல் அஹல்யா மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ முகாம் மற்றும் Privilege Fast Service card வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here