தமிழ்நாடு வக்பு வாரிய புதிய தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கே. நவாஸ் கனி அவர்களுக்கு பாராட்டு விழா.
நாள் 28-09-2024 அன்று துபாயில் IUML இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதற்காகவும் மற்றும் தமிழ்நாடு வக்பு வாரியத்தில் வரலாற்றில் முதன் முறையாக இளம் வயது வரியத் தலைவராக பொறுப்பேற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் நவாஸ் கனி சாஹிப் அவர்களுக்கு துபாய் ராயல் டைமண்ட் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை H. M. முகம்மது ஜமாலுதீன் அவர்களின் தலைமையில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியை துபை ஈமான் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் முஹம்மது தாஹா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்
துவக்கமாக இறை வசனம் ஓதி நிகழ்ச்சியை அய்மான் சங்கத்தின் பொதுச்செயலாளர் லால்பேட்டை ஏ. முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி அவர்கள் துவங்கி வைத்தார்கள்.
பாராட்டு விழா நிகழ்ச்சியில் அய்மான் சங்கத்தின் சார்பாக பைத்துல் மால் தலைவர்i அதிரை ஏ சாஹுல் ஹமீது ஹாஜியார் அவர்கள் வாழ்த்துரை வழங்கி கௌரவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாப் நவாஸ் கனி அவர்களுக்கு அய்மான் சங்கத்தின் சார்பில் அனைத்து நிர்வாகிகளும் பொன்னாடை போற்றி கௌரவித்தார்கள்
இந் நிகழ்ச்சியில்,சங்கத்தின் துணைத் தலைவர்கள் காதர் மீரான் ஃபைஜீ, மதுக்கூர் Y. M. அப்துல்லாஹ், ஆவை எ. ஸ்.முகம்மது அன்சாரி, பொருளாளர் பசுபதி கோவில் சாதிக் பாட்ஷா, நிர்வாகச் செயலாளர் ஆடுதுறை MAK முஹம்மது அப்துல் காதர், செயற்குழு உறுப்பினர்கள் அம்பகரத்தூர் முஹம்மது கைசர், கட்டுமாவடி தஸ்தகீர் இப்ராஹிம் மற்றும் துபாய் செயற்குழு உறுப்பினர் இர்ஷாத் அஹமத் உடன் இருந்தார்கள்.
நிகழ்ச்சியில் ராயல் டைமண்ட், அபுதாபி அய்மான் சங்கம், துபாய் ஈமான் சங்கம், அமீரக திமுக, அமீரக காயிதே மில்லத் பேரவை, வழுத்தூர் துபாய் ஜமாஅத், துபாய் தமிழ் சங்கம், அறந்தாங்கி துபாய் ஜமாஅத், துபாய் பெண்களின் அமைப்புகள், மற்றும் பல தமிழ் அமைப்புகளின் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
தமிழ்நாடு வக்பு வாரிய வரலாற்றில் முதன் முறையாக இளம் வயது வாரியத் தலைவராக பொறுப்பேற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் நவாஸ் கனி சாஹிப் என்பது குறிப்பிடத்தக்கது , அவர்களின் மேலான மக்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் .
மேலும் நிகழ்ச்சி ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திருந்த துபாய் ராயல் டைமண்ட் குழுமத்தின் தலைவர் மற்றும், பொதுச் செயலாளர் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் அய்மான் சங்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் .