திருச்சி அய்மான் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் புதிய முதல்வர் முனைவர் பேராசிரியை முனப்பர் ஹுசைனா பொறுப்பேற்றார்.
வெள்ளி விழாவை எதிர்நோக்கி உள்ள திருச்சி, அய்மான் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 6.12.24 அன்று புதிய முதல்வராக கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் பேராசிரியை முனவ்வர் ஹுசைனா இயக்குனராக கணினி பயன்பாட்டு துறை தலைவர் பேராசிரியை பஹ்மிதா தபசின் துணை முதல்வர்களாக ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை துறை தலைவர் பேராசிரியை ஜாஸ்மின் உகநிதா , வணிகவியல் துறை தலைவர் பேராசிரியை ரேவதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
அய்மான் கல்லூரி வளாகத்தில் “ஹாஜி சம்சுத்தீன் கலையரங்கில் ” கல்லூரி தலைவர் காஜி முனைவர் காதர் பக்ஸ் ஹுசைன் ஸித்தீக்கி தலைமையில் நடைபெற்ற அறிமுக கூட்டத்தில் கல்லூரி செயலாளர் மற்றும் தாளாளர் ஹாஜி ஹபீபுல்லாஹ் மாணவிகளுக்கு அறிமுகம் செய்து உரை நிகழ்த்தினார் .நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஹாஜி ஹசன் அஹ்மது பொருளாளர் அப்துல் மஜீத் முன்னிலை வகித்தனர்.