கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர் – சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த அய்மான் சங்கம்

0
51
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர் ஆதில் பாஷா அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த அய்மான் சங்கம்.
சில தினங்களுக்கு முன்பாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சகோதரர் ஆதில் பாஷா அவர்கள் அபுதாபி பேருந்து நிலையத்தில் உணவு மற்றும் தங்குமிடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்ற செய்தி அய்மான் சங்கத்திற்கு கிடைக்கப் பெற்றோம்.
அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் லால்பேட்டை ஏ.முகம்மது அப்பாஸ் மிஸ்பாஹி அவர்களின் ஆலோசனையின்படி சகோதரர் ஆதில் பாஷா வேலை செய்த கம்பெனியில் தொடர்பு கொண்டு இந்திய தூதரகத்தின் உதவியுடன் தேவையான ஆவணங்களை பெற்று அவர் மேல் தலை மறைவு புகார் இருந்ததை நீக்கி அனைத்து காரியங்களும் கிளாங்காடு அப்பாஸ் முகம்மது இப்ராஹீம் அவர்கள் செய்து கொடுத்தார்கள்.
மேலும் அமீரக அரசால் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பின் வழியாக நாள் 05-11-3024 அன்று அபுதாபி விமான நிலையத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வழியாக சொந்த ஊர் சென்றடைந்தார்.
அவரை அபுதாபி பேருந்து நிலையத்தில் நேரில் சென்று வழி அனுப்புவதற்காக அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை ஹெச். எம். முகம்மது ஜமாலுதீன் அவர்கள் தலைமையில் பைத்துல் மால் தலைவர் அதிரை ஏ சாகுல் ஹமீது ஹாஜியார், நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர், சமூக சேவகர் FAB கணேஷ், செயற்குழு உறுப்பினர்கள் மேலப்பாளையம் முகம்மது இம்ரான் மற்றும் மேலப்பாளையம் முஹம்மது நஷீர் உள்ளிட்ட அனைவர்களும் கலந்துகொண்டார்கள்.
இறைவன் பொருத்தத்தை நாடி அவர் சொந்த நாடு செல்வதற்கு உடலாலும் பொருளாளும் உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Thanks to @Uma sankari madam dubai.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here