பேராசிரியர் முஹம்மது அஸ்கர்க்கு SPIRIT OF INDIA விருது

0
50
ஊடகம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு சேவைப் பணிகளைப் பாராட்டி
ROTARY CLUB OF MADRAS METRO 12 ஏப்ரல் 2024 அன்று சென்னை மவுண்ட் ரோடு
MMA அரங்கில் வைத்து நடைபெற்ற சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில் SPIRIT OF INDIA AWARD என்னும் தேசிய விருது பேராசிரியர் முஹம்மது அஸ்கர்அவர்களுக்கு வழங்கப்பட்டது.
தொழில், அரசுத்துறை, மருத்துவம், இலக்கியம், பண்பாடு போன்ற துறைகள் சார்ந்தும் பல்வேறு அறக்கட்டளைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் வழியாக மக்கள் பணியாற்றி வரும் சேவைக் குறித்தும் விளையாட்டு, கலைத்துறை போன்ற பல்துறை சாதனையாளர்கள் பற்றியும் இதுவரை 850க்கும் மேற்பட்டோரை நேர்முகம் கண்டு ஒலிபரப்பு செய்திருக்கிறார்கள் .
அதன் வழியாக பல புதிய வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைத்திருக்கின்றன.
அதேபோன்று அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பில் கடந்த இரு ஆண்டுகளாக நடத்தி வரும் டிஜிட்டல் ஊடக கல்வியின் மூலமாக 200க்கும் அதிகமான ஊடகவியலாளர்களை உருவாக்கும் முயற்சியையும், அதைத் தொடர்ந்து
Hira skill development Academy Education consultant trainers program மூலமாக தமிழக முழுவதும் 30க்கும் மேற்பட்ட உயர்கல்வி வழிகாட்டிகளை ஆலோசகர்களாக உருவாக்கி தந்த பணிகளையும், இளைஞர்களின் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு தகவல்களை கண்டறிந்து உரியவர்களுக்கு வழங்கி Youth Development Movement
மூலமாக நூற்றுக்கணக்கான இளைஞர்களின் கல்வி, தொழில், மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்த பணிகளையும் மையப்படுத்தி கடந்த மாதம்
Indian express ஆங்கில நாளிதழ் ஒரு சிறப்பு கட்டுரையை வெளியிட்டிருந்தது.
கட்டுரையை எழுதிய நாகர்கோயில் செய்தியாளர் அப்துல் ராஃபி அவர்களுக்கும் ஆசிரியர் குழுவிற்கும் அந்த பேட்டிக் காண ஏற்பாடுகளை செய்த சகோதரர் குளச்சல் அசீம் அவர்களுக்கும் அய்மான் சார்பாக நன்றி.
அந்த கட்டுரையை படித்த ROTARY CLUB OF MADRAS METRO நிர்வாகிகள் சாதனையாளர்களுக்கு வழங்கப்பட இருந்த விருதுகளின் பட்டியலில் பேராசிரியர் முஹம்மது அஸ்கர் அவர்களின் பெயரையும் பரிசீலித்து இணைத்துக் கொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here