கடந்த நவம்பர் 7ஆம் தேதி அன்று சகோதரர் செந்தில்குமார் என்பவர் குவைத்தில் இருந்து அபுதாபி வழியாக சென்னைக்கு பயணப்பட்டு வந்தவர், அபுதாபி விமான நிலையத்தில் உடல்நிலை சரியில்லாத காரணமாக சென்னை செல்லும் விமானத்தில் ஏறாமல் அபுதாபி விமான நிலையத்தில் தங்கிவிட்டார். அவரை எப்படியாவது பத்திரமாக மீட்டு தாயகத்திற்கு அனுப்பி வைக்கும்படி செந்தில்குமாரின் குடும்பத்தார்கள் அய்மான் சங்கத்தின் நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார்கள்.
அதன்படி அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள் விரைந்து செயல்பட்டு அபுதாபி விமான நிலையத்தில் பணிபுரிந்து வரும் லால்பேட்டையை சேர்ந்த சகோதரர் ஒருவரின் மூலமாக செந்தில்குமார் அவர்களின் நிலையை கேட்டு அறிந்தோம். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் அபுதாபியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருக்கிறார் என்று அறிந்து கொண்டோம்.
இந்திய தூதரகத்தின் உதவியுடன் அய்மான் சங்கத்தின் பொது செயலாளர் லால்பேட்டை ஏ முகமது அப்பாஸ் மிஸ்பாஹி அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தார்கள்.
மேலும் நவம்பர் 13ஆம் தேதி அன்று செந்தில்குமார் அவர்களின் பயணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை அய்மான் செயற்குழு உறுப்பினர் தஸ்தகீர் இப்ராஹிம் அவர்களுடன் இணைந்து ஏர் அரேபியா விமான நிர்வாகிகளின் உதவியுடன் செய்து முடித்து இறையருளால் நல்ல முறையில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.